பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 E ஆரணிய காண்ட ஆய்வு

திருமண ஏற்பாட்டின்போது, பெண் வீட்டுக்காரரும் பிள்ளை வீட்டுக்காரரும் ஒருவர்க்கு ஒருவர் தத்தம் பெருமை களை அள்ளி வீசுவார்கள். அந்த முறையில், அரக்கி தங்கள் குலப்பெருமையை வாரிக் கொட்டுகிறான்.

பூவிலோன் புதல்வன் = புலத்தியன் - புலத்தியன் மைந்தன் விச்சிரவசு, விச்சிரவசுவின் புதல்வி சூர்ப்பணகை. எனவே, பிரமனுக்கு அவள் கொள்ளுப் பேர்த்தியாம். மற்றும் அவள் செல்வத்தில் செழித்த குபேரனது தங்கையாம். குபேரனோ சிவனுக்கு நண்பனாம் - சிவனோ முப்புரங்களை எரித்தவனாம்.

விச்சுரவசு பாரத்துவாசனின் மகளை மணந்து குபேரனைப் பெற்றானாம். அதே விச்சிரவசு கேகசி என்னும் அரக்கியையும் மணந்து இராவணன், கும்பகர்ணன், சூர்ப்பணகை, விபீடணன் ஆகியோரைப் பெற்றானாம். குபேரனுக்கும் சூர்ப்பணகைக்கும் தாய் வேறு வேறு எனினும், தந்தை விச்சிரவசு என்னும் ஒருவனே யாதலின், அவள் குபேரனுக்குத் தங்கை முறையாகிறாள்.

மேலும் அவள் இராவணனுக்குத் தங்கையாவாள் அந்த இராவணனோ எட்டுத்திக்கு யானைகளையும்வென்றவனாம்; அம்மட்டுமா! சிவனது கைலை மலையையே தூக்கியவனாம்.

அம்மட்டுமா மூன்று உலகங்களையும் ஆள்பவனாம்.

இவ்வாறாக, தன் மரபினர் தெய்வத் தன்மையும்

செல்வமும் பெரிய துணையும் பெரிய மறமும் பெரிய

அரசுரிமையும் உடையவர்கள் எனப் புகழ்கிறாள்.

சூர்ப்பணகை என்னும் தன் பெயரைச் சொன்னால்

அரக்கி என்று தெரிந்துவிடும் எனக் காமவல்லி என்னும் பெயரைக் கூறியுள்ளாள். உண்மையில் காமவல்லியே.