பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முமனார் 0 123

திருநகர் தீர்ந்த பின்னர்ச்

செய்தவம் பயந்தது என்னா வரிசிலை வடித்த தோளான் வாள்

எயிறு இலங்க நக்கான்’ (56) நிருதர் அருளும் அரக்கியோடு இன்பமும் பெற்ற தல்லாமல், எல்லா உலக அரசும் கிடைக்கும் என்பதால், 'யாண்டும் உறையவும் பெற்றேன்’ என்றான்.

அடேயப்பா! நான் ஒன்று மட்டுமா பெற்றேன்? பல பெற்றேன் என்னும் பொருளில் ஒன்றோ என்றான்.

அயோத்தியை விட்டு காட்டுக்கு வந்தது நல்லதாயிற்று. காட்டுக்கு வந்ததனால்தானே பத்து ஆண்டுகள் தவம் இயற்ற முடிந்தது. அவ்வாறு தவம் இயற்றியதினால்தானே நீ சொல்லும் பேறுகளையெல்லாம் பெற முடிந்தது.

இவ்வாறு இராமன் கூறி மகிழ்ச்சியால் சிரிப்பவன் போல் கடகட என்று உரக்க ஏளனச் சிரிப்பு சிரித்தான். இது எள்ளல், பேதைமை ஆகியவை காரணமாகத் தோன்றிய சிரிப்பாகும். எள்ளல் = அவளை இகழ்தல். பேதைமை = (அரக்கியின்) மடத்தனம்.

சீதையின் வருகை

இராமன் அரக்கியை இகழ்ந்து சிரித்துக் கொண்டிருந்த நேரத்தில், சீதை தவக்குடிலை விட்டு வெளியே வந்தாள். அவளைக் கண்டு அவளது அழகில் மயங்கிய அரக்கி பின் வருமாறு எண்ணுகிறாள்.

இவ்வளவு அழகுடையவள் இவன் மனைவியாய் இருக்க முடியாது. இவ்வளவு அழகினராய் இங்கு வேறு எவரும் இல்லை. தாமரை மலரில் வதியும் திருமகள் தரையில் அடி படிய இப்பெண் உரு எடுத்து வரமாட்டாள். எனவே இவள் யாரோ எனத் திகைத்தாள்!