பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 125

என்பது குறள். எனவே, கற்பு மிக்க அழகிய சீதை எங்கிருப்பினும் தவறாக எண்ண முடியாது. இதை அரக்கி அறியாமல் ஐயப்படுகிறாள்.

பசு மந்தையின் நடுவே இருந்து கொண்டு பனங் கள்ளைக் குடிப்பினும், பார்ப்பவர்கள் பால் குடிப்பதாகவே எண்ணுவார்களாம். பனந் தோப்பின் நடுவிலே இருந்து கொண்டு பாலைப் பருகினும் பனங் கள் குடிப்பதாகவே பார்ப்பவர்கள் மதிப்பிடுவராம். இதைப் போல் கீதையைத் தவறாக எண்ணி விட்டாள் சூர்ப்பணகை.

என் படுவர் பிறர்

மேலும் எண்ணுகிறாள் அரக்கி இவளைப் (சீதையைப்) பார்த்ததிலிருந்து இவளது அழகில் மயங்கிய என் கண்கள் வேறு எதையும் நோக்கமாட்டா; என் கருத்தும் வேறு எதிலும் செல்லவில்லை. பெண்ணாகிய எனக்கே இந்த நிலை எனில், ஆடவர்கள் இவளைக் கண்டு என்னபாடு படுவரோ?

'கண் பிறபொருளில் செல்லா

கருத்து எனின் அஃதே கண்ட பெண்பிறந் தேனுக்கு என்றால்,

என்படும் பிறருக்கு என்றாள்” (60)

இவ்வாறு புனைந்துரைப்பது கம்பரிடத்தில் உண்டு. சீதைக்கு ஒப்பனை (அலங்காரம்) செய்த மகளிரே சீதையின் அழகுக்கு மயங்கி விட்டதாகக் கம்பர் கூறி

'மஞ்சர்க்கும் மாதரார்க்கும் மனம்

என்பது ஒன்றே யன்றோ’ எனப் பால காண்டத்தில் கூறியுள்ளார். மற்றும், இராமன் ஆடவர் பெண்மையை அவாவும் தோளினன்’ எனக்

கூறவும் தவறவில்லை.