பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 () ஆரணிய காண்ட ஆய்வு

சிறு பிள்ளைகள் குறும்பு செய்தால், பெரியவர் தம் மூக்கின்மேல் தம் கையை வைத்து அரிவது போல் காட்டி, இப்படி மூக்கை அரிந்து விடுவேன் என்று மிரட்டுவதுண்டு.

ஒருவர் ஒரிடத்தில் மானக்கேடு அடைந்துவரின், அவர் அங்கே மூக்கு அறுபட்டு வந்தார்’ என்று சொல்லும் வழக்கம் உண்டு. இதை ஆங்கிலத்தில் Nose cut என்பர்.

உறுப்புகளுள் முக்கு அழகு அளிக்கும் ஒரு சிறந்த உறுப்பாகும். தீயகாற்றை வெளியே விட்டு, நல்ல காற்றை (உயிரகத்தை) உள்ளே இழுத்து உயிர் காப்பதல்லாமல் அழகும் தரும் உறுப்பு அது. பெண்ணோ அல்லது பிள்ளையோ முக்கும் முழியுமாய் (விழியுமாய்) நன்றாக இருப்பதாகக்கூறும் வழக்கமும் உண்டு. முக்கு எடுப்பாய் இல்லாதவரைச் சப்பைமுக்கு-சப்பான்மூக்கு- முக்கரையன் என்றெல்லாம் கேலியாய்ப் பேசுவது உண்டு.

இத்தகைய மூக்கு அறுபட்டு மானக்கேடு அடைந்தாள் அரக்கி.

காது அறுய்பு

மூக்கை அறுத்து விடுவார்களா என்று சொல்வது போலவே காதை அறுத்து விடுவார்களா என்று சொல்வதும் உண்டு. நீ இதைச் செய்து விடுவாயேயாயின் நான் என் காதை அறுத்துக் கொள்கிறேன். என் மீசையைச் சிரைத்துக் கொள்கிறேன் என்று சிலர் சூள் உரைப்பதைக் கொண்டு காது அறுப்பு பற்றியும் அறியலாம்,

முலை அறுப்பு

முலை அறுப்பு கிடையாது. ஆனால், இலக்குவன் வன் முறையில் அவளுடைய முலைக் காம்புகளை அறுத்து மானக்கேடு செய்துள்ளான். இது நிகழ்ந்திருக்கக் கூடாது.