பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் 0 139

இங்கே அரக்கி என்ன சொல்கிறாள்: சீதை நடுவில் மாற்றுருவில் வந்த அரக்கியாம்; இராமன் தனக்கு (அரக்கிக்கு) உரியவனாம். எனவே, சீதை அரக்கிக்குச் சககளத்தியாம். அதனால் மற்றவளைக் கண்டால் மனம் கொதிக்காதா எனக் கேட்கிறாள். எவ்வளவு வியப்பான

செய்தி இது!

கணவன் மற்றொருத்தியை விரும்பியதாக நம்பி மனைவி கணவன் மீது ஊடல் கொள்வது மக்கள் இனத்தில் உண்டு. இது அஃறிணை உயிரிகளிடத்திலும் இருப்பதாகப் புலவர்கள் புனைந்துரைப்பது ஒருவகை இலக்கிய மரபு.

இங்கே ஆண் தவளை பெண் சங்கைக் காதலிப்பதாக எண்ணிப் பெண் தவளை ஆணின் மேல் ஊடல்

கொள்வதாகச் சொல்லப்பட்டிருப்பது ஒருவகைச் சுவை.

ஒர் ஆண்கிளி ஒவியத்தில் உள்ள கனியை உண்மையான கனி என்று உண்ணப்போக, அக்கனி ஒவியத்தின் பக்கத்தில் ஒரு பெண் கிளி ஒவியம் இருக்க, அதை உண்மையான பெண் கிளி என எண்ணி, அதனை ஆண்கிளி காதலிப்பதாக நம்பிப் பெண் கிளி ஆண்கிளிமேல் ஊடல் கொண்டதாகச் சொல்லப்பட்ட கற்பனையும் உண்டு.

பிரபு லிங்க லீலையில் இத்தகைய சுவைமிக்க கற்பனை ஒன்றைச் சிவப்பிரகாசர் ஒரு பாடலில் செய்துள்ளார்:

ஒரு களிறு இலைத்தளிர்களை ஒடித்துத் தேனில் தோய்த்துப் பிடியின் வாயில் கொடுத்துக் கொண்டிருந்த தாம். பக்கத்தில் ஒரு பளிங்கு அறை இருந்ததாம். இந்தக் காட்சி அந்தப் பளிங்கில் தெரிந்ததாம். அதைக் கண்ட பெண் யானை (பிடி) தன் கணவனாகிய களிறு வேறு ஒரு பிடிக்கு உணவு ஊட்டுவதாக மாறி எண்ணிக் களிற்றின் மீது ஊடல் கொண்டு கூக்குரல் இட்டதாம்: