பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 m ஆரணிய காண்ட ஆய்வு

தளிர்க் குளகினைத்தேன் தோய்த்துத்

தனது வாய் கொடுக்கும் செய்கை பளிக்கறை அதனுள் கண்டு பரிந்து வேறொன்றினுக்கு இங்கு அளித்த தென்று உளம் மயங்கி

அரும்பிடி ஒரு கூர்ங்கோட்டுக் களிற்றினை முனிந்து செல்லும்

கம்பலை உடைத்து அக்குன்றம் (19:23) மேற் கூறிய இரண்டு செய்திகளில், வேறொரு பெண் கிளியோடு ஆண் கிளியும், வேறொரு பெண் யானையோடு ஆண் யானையும் உறவு கொண்டதற்காக - அதாவது ஒரே இனத்திற்குள் உறவு கொண்டதற்காக ஊடல் நிகழ்ந்த தாகச் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால், கம்பர் பாடலில், வேறு இனமாகிய பெண் சங்கோடு ஆண் தவளை உறவு கொண்டதற்காக ஊடல் நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வேறு இனத்தோடு உறவு கொள்ளும் செய்தி ஒன்று புற நானூற்றில் புனைந்துரைக்கப்பட்டுள்ளது. அதாவது, நத்தையும் சங்கும் உறவு கொண்டதாம். பாடல் இதோ:

"கதிர்க் கோட்டு நந்தின் சுரிமுக ஏற்றை

காகிளவளையொடு பகல் மணம் புகூஉம் ர்ேதிகழ கழனி' (266; 4,5,6) இங்கே நாட்டைப் பற்றிச் சொல்லியிருப்பதில் ஒரு கருத்து உண்டு. பெண் சங்கை ஆண் தவளை விரும்பிய தாகப் பெண் தவளை ஊடல் கொள்ளுவது என்பது ஓர் உவமையாகும். அதாவது, அரக்கியின் பார்வையில், சீதை பெண் சங்கு - இராமன் ஆண் தவளை - அரக்கி பெண் தவளையாம். பெண் தவளை தன் மாற்றானாகிய பெண் சங்கை வெறுப்பதைப் போல் தான் (அரக்கி) மாற்றாளைக் (சீதையைக்) கண்டு உள்ளம் கொதிக்கிறாளாம்.