பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/143

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் 그 141

இவ்வாறு, உள்ளே ஓர் உவமம் உறைந்துள்ள அமைப்புக்கு உள்ளுறை உவம் என அணியியலார் பெயர் கூறுவர். சங்க இலக்கியங்களில் இந்த அமைப்பை நிரம்பக் காணலாம். கம்பரும் இதைக் கையாண்டுள்ளார்.

இவ்வாறு கூறிய அரக்கியை நோக்கி இவ்விடத்தை விட்டு ஓடிப்போ என இராமன் விரட்டினான். ஆனால் அரக்கி நகராமல் மேலும் மேலும் வற்புறுத்திக் கொண்டே யிருந்தாள். (சங்கும் தவளையும் போல் இராமனும் அரக்கியும் வெவ்வேறு இனம்).

மூக்கு மிகை

சூர்ப்பணகை கூறுகிறாள். என் முக்கை அறுத்ததனால் என்ன கெட்டுப் போயிற்று. உங்களுக்கு இந்தத் தோற்றம் பிடிக்கவில்லை எனில் அழகான வேறு தோற்றம் எடுக்க என்னால் இயலும் என்பால் நீங்கள் அருள் செலுத்துவீர் களாயின், என் பெண்மைக்குப் பழுதொன்றும் இல்லை. முகத்தில் முன்னால் நீட்டிக் கொண்டிருக்கும் மூக்கு பெண்களுக்குத் தேவையற்றது - மிகையானது:

போக்கினீர் என்காசி, போய்த்து

என், நீர் பொறுக்கிலீரேல் ஆக்குவென் ஒருகொடி வரையின்

அழகு அமைவென் அருள்கூரும் பாக்கியம் உண்டெனின் அதனால்

பெண்மைக்கு ஒர்பழுது உண்டோ மேக்கு உயரும் நெடுமூக்கு

மடந்தையர்க்கு மிகை அன்றோ" (130) நாசி = மூக்கு, மேக்கு உயர்தல் = மேலே உயர்ந்து தோன்றுதல். தன் மூக்கு போய் விட்டதால், மூக்கு மிகை யானது - தேவையற்றது எனச் சமாளிக்கிறாள்.