பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 0 143

கண்களை உள்ளடக்கி மூக்கை வெளியே தூக்கி நீட்டச் செய்திருப்பது இயற்கையின் தேர்வு (Selection of Nature) எனப்படும். யானைக்கு அவ்வளவு நீளத் துதிக்கை அமைந் திருப்பது போன்றதுதான் இது.

மற்றும் கூறுகிறாள். நீங்கள் அரிந்ததின் காரணமும் தெரிகிறது. முக்கு இல்லை யெனில் வேறு யாரும் இவளை விரும்பார்; இவள் நம் பக்கத்திலேயே இருப்பாள் என்று எண்ணியே இவ்வாறு செய்ததாகக் கருதியே மகிழ்கிறேன்நீங்கள் பிழை செய்யவில்லை - நல்லதே செய்துள்ளிர்;

'பொன்னுருவப் பொருகழல்ர் புழை காண

முக்கு அரிவான் பொருள்வே றுண்டோ இன்னுருவம் இதுகொண்டு இங்கு இருந்தொழியும் நம்மருங்கே, ஏகாள் அப்பால், - பின்னிவளை அயல் ஒருவர் பாரார் என்றே

அரிந்தீர், பிழை செய்தீரோ? அன்னதனை அறிந்தன்றோ அன்பு இரட்டி

பூண்டதுங்ான் அறிவி லேனோ!" (133)

புழை = துளை. நம் மருங்கு = நம் பக்கத்தில். பிழை செய்தீரோ என்பதன் இறுதியில் உள்ள 'ஒ' எதிர்மறை - அதாவது, பிழை செய்யவில்லை என்பது கருத்து. என் மூக்கை அரிந்ததால் உங்கள்மேல் எனக்கு இரட்டிப்பு அன்பு ஏற்பட்டுள்ளது.

பாம்பின் கால்

அரக்கர் உம்மோடு போர் புரியின், யான் உங்கட்குத் துணையாய் நின்று அவர்களின் வஞ்சக மாயங்களை யெல்லாம் உங்களுக்குக் காட்டிக்கொடுத்து உதவி புரிவேன்.