பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/146

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


144 с ஆரணிய காண்ட ஆய்வு

அரக்கரின் வஞ்சகத்தை யானே அறிவேன். பாம்பு அறியும் பாம்பின் கால்’ என்று உலகம் சொல்வதை நீங்கள் அறியீரோ.

"பாம்பறியும் பாம்பின் கால் என மொழியும்

பழமொழியைப் பார்க்கி லீரோ” (139) என்பது பாடல் பகுதி. இந்தப் பகுதி முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி நானூறு' என்னும் நூலிலுள்ள -

"புலமிக்க வரைப் புலமை தெரிதல்

புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க பூம்புனல் ஊர பொதுமக்கட் காகாதே பாம்பறியும் பாம்பின் கால்' என்னும் பாடலிலிருந்து கம்பர் கடன் வாங்கியதாகும். பாம்பின் காலைப் பாம்பே அறிய முடியும்; அதுபோல் புலவரின் புலமையைப் புலவரே அறியமுடியும் என்பது கருத்து.

பாம்புக்குக் கால் இல்லை எனப் பொதுமக்கள் எண்ணிக் கொண்டுள்ளனர். பாம்புக்கும் கால்கள் உண்டு. அதன் அடிப்பகுதியில் பல செதிள்கள் இருப்பதைக்காணலாம். அந்தச் செதிள்களே கால்கள். அந்தச் செதிள்களால் தரையிலுள்ள மண் - துசு துரும்பு போன்றவற்றைப் பற்றிக்கொண்டு நகர்கிறது. வழவழப்பான பளிங்குத் தள வரிசையில் விட்டால் பாம்பால் நகர முடியாது,

எனவே, பாம்பின் கால்களைப் பாம்பே அறிய முடிவது போல், அரக்கரின் சூழ்ச்சியை அவர்களைச் சேர்ந்த என்னால்தான் அறிய முடியும் என்றாள். அவள்.

மேலும் கூறினாள்: பெரியராகிய நீ என்னை மணந்து கொள்ளாவிடின், உன் தம்பி இளையவர்க்காவது என்னை