பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 0 145

மணம் முடித்து வைக்கின் உங்கள் வெற்றிக்குப் பெரிதும் உதவுவேன்.

மூக்கு இல்லாதவளோடு நான் வாழமாட்டேன் என்று உன் தம்பி தெரிவித்தால், இடையே (இடுப்பே) இல்லாதவளோடு (சீதையோடு) நீ எப்படி வாழ்கிறாய்? அதைக்கூறி இளையவரோடு என்னைச் சேர்ந்துவிடு என்றாள். . . "

'பெருங்குலா உறுநகர்க்கே ஏகுங்ாள்

வேண்டும் உருப் பிடிப்பேன் அன்றேல் அருங்கலாம் உற்றரிந்தான் என்னினும் ஈங்கு

இளையவன் தான் அரிந்த காசி ஒருங்கிலா இவளோடும் உறைவேனோ என்பானேல் இறைவ ஒன்றும் மருங்கு இலாதவளோடும் அன்றே ே

நெடுங்காலம் வாழ்ந்தது என்பாய்” (141)

நாசி=மூக்கு. மருங்கு= இடுப்பு.

பெண்களின் இடை சிறுத்து இருப்பதால் இடையே இல்லை என்பதாகப் புலவர்கள் பாடுவது ஒருவகை மரபு. இந்தக் கருத்தை வைத்து அரக்கி திறமையாகவும் சூழ்ச்சியுடனும் பேசிப் பார்க்கிறாள். சிறியவன் மூக்கில்லை என மறுக்கின், இடையில்லாத சீதையுடன் நீ வாழ்வதைச் கூட்டிக் காட்டு என்று சொல்லித் தருகிறாள். அயோத்திக்குச் செல்லும் போது அழகிய உருவம் எடுத்துக் கொள்வேன் எனக்கூறி ஏமாற்றிப் பார்க்கின்றாள்.

அரக்கியை மிரட்டல்

காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது என்பதற்கேற்ப எவ்வளவு மறுத்தும் அரக்கி போவதாகத் தெரியவில்லை. உடனே இலக்குவன் வேல் படையைக்