பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/148

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


146 to ஆரணிய காண்ட ஆய்வு

கடைக் கண்ணால் பார்த்தபடி, இராமனிடம், இவளைக் கொன்றால் தவிரப் போக மாட்டாள்.எனவே கொன்று விடலாம் என ஆணை கேட்டான். அது நல்லதே - போகாமல் இருந்து கொண்டே இருப்பாளேயானால் அது செய்யலாம் என்றான்.

"என்றவள்மேல் இளையவன் தான் இலங்கு இலைவேல்

கடைக்கணியா இவளை ஈண்டுக் கொன்று களையேம் என்றால் நெடி தலைக்கும்

அருள் என்கொல் கோவே என்ன நன்று அதுவே ஆம் அன்றோ போகாளேல்

ஆக என நாதன் கூற ஒன்றும் இவர் எனக்கு இரங்கார் உயிர் இழப்பென்

கிற்கின் என அரக்கி உன்னா' (143)

இலக்குவன் இராமனிடம் பணிவுடன், ஆணையிட வேண்டுகிறான். இங்கும் இராமன் உயர் பண்பை இழக்க வில்லை. நீ சொல்வது சரிதான்.அவள் போகவில்லை எனில் செய்யலாம் என நயமாகப் பதில் இறுத்தான்.

பின்னர் அரக்கி, இவர்கள் இரக்கப்பட மாட்டார்கள். நம்மைக் கொன்று விடுவர்.இங்கே நிற்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்தாள்.

அரக்கியின் சூள்

மூக்கு, காது, முலை ஆகியவற்றை இழந்து யான் மானத்தோடு எப்படி வாழ்வேன்?:ஏ மானிடரே! இவ்வளவு நேரம் உங்கள் உள்ளத்தை அறிய வஞ்சகமாகப் பேசி நடித்தேன். இன்னும் சிறிது நேரத்தில், காற்றினும் கனலினும் கடியவனும் கொடியவனும் உங்கட்கு எமனும் ஆகிய கரனைக் கொண்டு வருவேன் எனச் சூள் உரைத்து அவ்விடத்தினின்றும் பெயர்ந்தாள்.