பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 0 151

கரனின் சினத்தைத் தணித்து, நம்பியே! நீ போருக்குப் போக நாங்கள் செய்யும் அடிமைக் கடன் நன்றாயுள்ளது! நீ தேவர் மேலா போர் புரியப் புறப்படுகிறாய் - இல்லையே. மனிதருடன்தானே? நாங்கள் இதைச் செய்யாமல் எதற்கு உள்ளோம்?

'வெம்பு கோபக் கனலை விலக்கினார்

நம்பி எம் அடிமைத் தொழில் நன்று எனா உம்பர்மேல் இன்று உருத்தனை போதியோ இம்பர்மேல் இனியாம் உளேமோ என்றார்” (12) யாங்கள் இதைச் செய்யாவிடின் உள்ளேம் அல்லேம் - இறந்து விட்டவராவோம் என்று கூறியதாகக் கருத்து கொள்ளல் வேண்டும்.

கரன் திறமையான சூழ்ச்சிக்காரன், ஒரு செயலைத் தலைவனே செய்யத் தொடங்கினால், அதைப் பார்க்கும் மற்றவர்கள் தாங்கள் செய்யத் தொடங்கிவிடுவர். இது ஒருவகை உலகியல்.

தேவர் சிரிப்பர்

தாங்கள் போருக்குச் செல்வதாகக் கூறிய படைத் தலைவர்களைக் கரன் நோக்கி, நீங்கள் நல்லதே சொன்னிர்கள். அந்த மனிதச் சிறுவர்களோடு நான் போர் புரிவது எனக்கு இகழ்ச்சி தரும்; இவ்வளவு பெரிய கரன் அச்சிறுவர்களோடு போர் செய்கின்றானே எனத் தேவர்கள் சிரிப்பார்கள். நீங்கள் போய் அவர்களைக் கொன்று குருதி குடித்து அவர்களின் பெண்ணோடு (சீதையோடு) திரும்பி வருவீராக - என்றான்:

'நன்று சொல்லினிர் நான் இச்சிறார்கள் மேல்

கென்று போர் செயின் தேவர் சிரிப்பரால் கொன்று சோரி குடித்து அவர் கொள்கையை வென்று மீளுதிர் மெல்லியலோடு என்றான்” (13)