பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/154

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


152 ஆரணிய காண்ட ஆய்வு

அந்த அற்பச் சிறு பையனோடு நாம் சரிக்குச்சரி வைத்துக்கொள்ளக் கூடாது என்று ஒதுங்கி விட்டேன் - அவனோடு நீ சரிக்குச்சரி வைத்துக்கொள்ளலாமா - என்றெல்லாம் உலகியலில் கூறுவது உண்டு. அதைத்தான் இங்கே கரன் கூறியுள்ளான்.

தேவரின் சிரிப்பு எள்ளல் (இகழ்தல்) காரணமாக ஏற் பட்டது. இஃதும் உலக இயற்கையே.

அவர் கொள்கையை வென்று என்றான்; அவர் கொள்கை யாது? அரக்கர் குலத்தை அழிக்க வந்துள்ளோம் என்று முன்பு அவர்கள் தெரிவித்துள்ளனர் அல்லவா? அந்த அவர்களின் எண்ணத்தை முறியடித்து அவர்களைக் கொல்லுதல்தான் அவர் கொள்கையை வெல்லுதல்' ஆகும்.

இராவணன் சீதையைக் கொண்டு செல்வதற்கு முன்பே, முன்னோடியாகச் சீதையைக் கொண்டு வரவேண்டும் எனக் கரன் கூறியுள்ளான்.

படைத் தலைவர்கள் பதினால்வரும் அவர்களைச் சேர்ந்த பலரும் போரில் இராமனால் கொல்லப்பட்டார்கள். இச்செய்தியைச் சூர்ப்பணகையால் அறிந்த கரன் தானே போருக்குப் புறப்பட்டான். கரனின் காலாள் படைஞர், தோள்களாகிய அலைகளுடன், ஊழிக் காலத்தில் உலகை அழிக்கப் பொங்கி எழும் கடல் போல் ஆர்ப்பரித்துப் போருக்குப் புறப்பட்டனர்:

“போர்ப் பெரும்படை பொம்மென் முழக்கமா

ர்ேத் தரங்கம் நெடுந்தடங் தோள்களா

ஆர்த்து எழுந்தது இறுதியில் ஆர்கலிக்

கார்க் கருங்கடல் கால்கிளர்ந் தென்னவே' (25)