பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/155

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் 0 153

தரங்கம் அலை. இறுதி உலகம் அழியும் ஊழிக் காலம். ஆர்கலி = பேரொலி, படை மறவர்களின் தொகுதி கடலாகவும், அவர்களின் நீண்ட பெரிய தோள்கள் அலைகளாகவும் கூறப்பட்டுள்ளன.

படையின் முழக்கம் பொம்.பொம் என்று இருந்ததாம். பொம் என்பது ஒர் ஒலிக் குறிப்பு. திருவதிகையில் கெடிலம் ஆற்றில் புதுவெள்ளம் வந்தபோது உழவர்கள் 'திமிதிம் எனப் பறையறைந்தார்களாம்.

'திமிதி மெனப் பறையறையப் பெருகுபுனல் கெடிலநதி

திருவதிகைப் பதிமுருகப் பெருமாளே”

இது போல் ஒலிக்குறிப்பு அமைப்பதில் அருணகிரி நாதர் மிகவும் வல்லவர்; குக்குக் குகுகுகு குக்குக் குகுகுகு என்று கூகையும், டிமிட டிமிடிமு டிட்டிம் எனத் தவிலும் ஒலி எழும்புவதாகக் கூறியுள்ளார்.

ஒடும் பசி

போர்க் கொடிகள் காட்டையும் விண்ணையும்மறைத்துக் கொண்டு, எங்கள் பசி தீரும் என்று ஆடுகின்ற பேய்கள் போல் அசைந்தாடினவாம்.

'காடு துன்றி விசும்பு கரங்தென

நீடி எங்கும் கிரந்த நெடுங்கொடி ஒடும் எங்கள் பசி என்று உவந்தெழுந்து ஆடுகின்ற அலகையின் ஆடவே' (26) ஆடும் கொடிகட்கு உவமையாகக் கூறப்பட்டுள்ள ஆடும் பேயினம், போரில் இறந்துபடும் பிணங்களை உண்டு பசி தீரும் என்றது போரின் கொடுமையைக் காட்டுகிறது.

மலைக்கு மலை தாவல்

தரையில் படைகள் மிகுதியா யிருப்பதால், நெருக்கம் உண்டாக, விரைந்து செல்ல முடியாமல், சில வீரர்கள் ஒரு