பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 ) ஆரணிய காண்ட ஆய்வு

மலையிலிருந்து இன்னொரு மலைக்கும் அதிலிருந்து மற்றொரு மலைக்குமாகத் தாவிச் சென்றனராம்.

'மலைத்தலைமிசைத் தலைமிசைத் தாவிச் சென்றனர்'

(55)

அரக்கி நோய்

அரக்கி சூர்ப்பணகை வழி காட்டிக்கொண்டு படைக்கு முன் சென்றாளாம். அவளுக்குக் கூறப்பட்டுள்ள உவமை நோயாம். நோய் எத்தகையது? கூடவே இருந்து கொண்டு உயிர்களை வருத்தி எமனுக்கு அளிக்கக் கூடியதாம். யாருடைய உயிரை? மாயையின் மயக்கட்டு நீங்கிப் பற்று அற்று ஒழுகும் உயரியோரின் உயிர்களையும் போக்கக் கூடியதாம் அந்த நோய்:

“வந்தது சேனை வெள்ளம் வள்ளியோன் மருங்கு மாயா பந்தமா வினையம் மாளப் பற்றறு பெற்றியோர்க்கும் உந்தரு நிலையதாகி உடன் உறைந்து உயிர்கள் தம்மை அந்தகற்கு அளிக்கும் நோய்போல் அரக்கிமுன் ஆக

அம்மா" (56) வள்ளியோன் மருங்கு - இராமன் பக்கம். மாயையின் கட்டு நீங்கிப் பற்றற்ற பெரியோராலும் நோய் நீக்க முடியாதாம், அருளாளர் பலர் நோயுற்று இறந்த வரலாறுகள் உண்டு. நோய் உடலுடனேயே இருக்குமாம். உடன் பிறந்தே கொல்லும் வியாதி என்பது ஒளவையின் கூற்று. இதுபோல், அரக்கியும் இந்த அரக்கர்களுடனேயே இருப்பவளாம். நோய் உயிரை எமனுக்கு அளிப்பது போல் அதாவது இறக்கச் செய்வது போல், இந்த அரக்கியால்

அரக்கர்கள் மடியப் போகின்றனர். அருமையான உவமை விளக்கம்.