பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் - 155

தோளின் சோம்பல்

கரன் படை வருதலைக் கண்ட இலக்குவன் இராமனை நோக்கி, இந்தப் படையோடு போர்புரியும் வாய்ப்பைத் தனக்கு அளிக்குமாறு வேண்டினான். இராமன் மறுத்து. இலக்குவ! நீ இங்கேயே சீதைக்குக் காவலாய் இருப்பாயாக, போரில் என்மேல் யார் வந்து மோதினும் அவர் அழிவது உறுதி. எனவே, இந்தப் போரிடும் வாய்ப்பை நீ எனக்கே கொடுத்து என் தோளை வருத்தும் சோம்பலைத் தீர்ப்பாயாக - என்றான்:

'tளருஞ் செருவில் விண்ணும்

மண்ணும் என்மேல் வந்தாலும் நாள் உலந்து அழியு மன்றே

நான் உனக்கு உரைப்பது என்னே ஆளியின் துப்பினாய் இவ்அமர்

எனக்கு அருளி கின்று என் தோளினைத் தின்னுகின்ற

சோம்பினைத் துடைத்தி எள்றான்” (63)

tளரும் செரு மீள அரும் செரு = சென்றவர் திரும்பி வருவதற்கு அரிய - வருவாரா மாட்டாரா என்ற ஐயத்திற்கு இடமான போர். அரசன் பெண்டாட்டியும் திருடன் பெண்டாட்டியும் கைம் பெண்டாட்டி என்பது ஒரு முது மொழி. அந்தக் காலத்தில் அரசனே நேரில் போருக்குப் போனான். இறந்து விடுவான் என்ற அச்சத்தால், அவன் மனைவி என்றைக்காயினும் கைம்பெண்டாட்டி (கைம்பெண்) யாகி விடுவாள் என்ற ஐயம் உண்டு. அந்தக் காலத்தில் திருடனுக்கு இறப்பு ஒறுப்பு தந்தனர். திருடன் இறப்பின் அவன் மனைவியும் கைம்பெண் ஆவாள். இதனால் இம் முதுமொழி எழுந்தது. இதைத்தான் மீளரும் செரு' என்றார் கம்பர்,