பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர் சண்முகனார் n 157

முற்றிக் காய்ந்த மூங்கில்கள் கோடைக் காலத்தில் ஒன்றோ டொன்று இழைந்து தீப்பற்றிக் கொள்வதுண்டு. இந்த இயற்கை அமைப்பைப் பார்த்தே, தொடக்கத்தில் மக்கள் தீக்கடைக்கோலைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தி வந்திருக்க வேண்டும்.

மானிடன் ஒருவன்

கரன் தன் படையினரை நோக்கிக் கூறுகின்றான்: வந்திருப்பவன் ஒரு மனிதன்; நம் படைக்கோ இந்தக் காட்டிலே இடம் போதவில்லை. இந்த நிலையில், தோற்றால் எனது தகுதி என்னாவது? எனவே, யானே சென்று இவனது உயிரை உண்ணுவேன். பார்ப்பீராக!

"மானிடன், ஒருவன், வந்த

வலிகெழு சேனைக்கு அம்மா கான் இடமில்லை என்னும் -

கட்டுரை கலந்த காலை யான்உடை வென்றி என்னாம்

யாவரும் கண்டு நிற்றீர் ஊன்உடை இவனை யானே

உண்குவன் உயிரை என்றான்” (68) வந்திருப்பவன் அரக்கனோ அல்லது தேவனோ அல்லன் . மனிதன் அவன். மனித இனம் எனினும் பலர் வந்திலர் - ஒருவன் மட்டுமே வந்துளான். நமது சேனையோ சாலப் பெரிது. நாம் வெற்றி காண வேண்டும். யான் ஒருவனே சென்று அவனது உயிரை உண்ணுவேன் - என்றான்.

உயிர் போன ஊனை உண்ணலாம்; ஆனால் உயிரை உண்பதாகக் கூறுவதும் ஒரு மரபே. திருவள்ளுவர் மூன்று இடங்களில் (326, 1084, 1221) உயிர் உண்ணும் என்னும் தொடரைப் பயன்படுத்தியுள்ளார்.