பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/160

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


18 டிரனிய காண்ட ஆய்வு

உயிரை உண்ணுதல் என்றால் உயிரைப் போக்குவது தான். ஏதாவது ஒரு பொருளைக் கெடுத்துவிடின், அதை அழித்து வாயில் போட்டுக் கொண்டான்' என்று கூறும் உலக வழக்கு ஈண்டு ஒப்புநோக்கத் தக்கது.

தீய கிமித்தங்கள்

அப்போது அகம்பன் என்னும் நிமித்திகன் தீய

நிமித்தங்கள் தோன்றுவதைக் கண்டு போருக்குச் செல்ல

வேண்டா எனத் தடுக்கிறான்.

குருதி மழை பொழிகிறது. முகில் ஞாயிறைப் பரிவேடம் சுற்றியுள்ளது. கொடியின் மீது காகங்கள் பொருது வீழ்ந்து பின்தரையில் கிடந்து புரள்கின்றன.

'குருதி மாமழை சொரிந்தன மேகங்கள் குமுறிப்

பருதி வானவன் ஊர்வளைப் புண்டது பாராய் கருது வீரகின் கொடிமிசைக் காக்கையின்கணங்கள் பொருது வீழ்வன புலம்பும் கிலம்படப் புரள்வ” (70) மற்றும் வாளின் வாயில் ஈக்கள் மொய்க்கின்றன. மறவர்களின் இடத்தோள்களும் இடக் கண்களும் துடிக் கின்றன. குதிரைகள் தூங்கி விழுகின்றன. நாய்களோடு சேர்ந்து நரிக் கூட்டங்கள் ஊளையிடுகின்றன:

'வாளின் வாய்களை ஈ வளைக்கின்றன, வயவர்

தோளும் நாட்டமும் இடம் துடிக்கின்றன, தூங்கி மீளி மொய்ம்புடை இவுளி வீழ்கின்றன, விரவி

ஞாளியோடு கின்று உளைக்கின்ற கரிக்குலம்

பலவால்” (71)

இவுளி = குதிரை. ஞாளி = நாய். மற்றும், பிடிகள் மதம் வழிய விடுகின்றன. களிறுகளின் கொம்புகள் ஒடிபடு கின்றன. உலகம் நடுங்கும். திக்குகள் எல்லாம் இடி