பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 0 159

விழுந்து எரிகின்றன. மறவரின் மாலைகள் புலால் நாறு கின்றன. பாடல்: (பிடிக்கு மதநீர் இல்லை).

'பிடியெலாம் மதம்பெய்திடப் பெருங்கவுள் வேழம்

ஒடியுமால் மருப்பு, உலகமும் கம்பிக்கும், உயர்வான் இடியும் வீழ்ந்திடும் எரிந்திடும் பெருந்திசை, எவர்க்கும் முடியின் மாலைகள் புலாலொடு முழுமுடை காறும்”

(72) இவ்வாறு தீய நிமித்தங்கள் தோன்றுவது பற்றிய செய்திகள் பல நூல்களில் கூறப்பட்டுள்ளன. மாதிரிக்காகச் சிலம்பிலிருந்து சில காண்பாம்:

"கட்சியுள் காரிகடிய குரலிசைத்துக் காட்டும் போலும்’ கரிக்குருவி கடவுவது தீய நிமித்தமாம், மற்றொன்று:

கண்ணகி கருங்கனும் மாதவி செங்கனும் உண்ணிறை கரந்தகத்து ஒளித்துர்ே உகுத்தன. எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன”

(5:237 - 239) ஆய்ச்சியர் குரவை - உரைப்பாட்டு மடையிலிருந்து ஒரு பகுதி வருமாறு: . 'குடப்பால் உறையா குவிஇமில் ஏற்றின்

மடக்கண் நீர்சோரும் வருவதொன் றுண்டு (1) உறிாறு வெண்ணெய் உருகா உருகும் மறிதெறித்து ஆடா வருவதொன் றுண்டு (2) நான்முலை ஆயம் கடுங்குபி கின்றிரங்கும் மான்மணி வீழும் வருவதொன் றுண்டு” (3) சிலம்பில் சொல்லப்பட்டுள்ள இந்த நிமித்தங்கட்கு ஏற்பப் பின்னால் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கம்பரால் கூறப்பட்டுள்ள தீய நிமித்தங்கட்கு ஏற்பப் பின்னால் கரன் படைகளோடு மடிகிறான். இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில் இது தரப்பட்டுள்ளது.