பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 ஆரணிய காண்ட ஆய்வு

இப்போது அகம்பன் தீ நிமித்தங்களைக் கூறிப் போருக்குப் போக வேண்டா எனத் தடுத்ததும், கரன் வெடிச் சிரிப்பு சிரித்து, பகைவரை அரைத்த அம்மியாகிய என் தோள்கள் போர் கிடைக்காமையால் iங்கிப் புடைத் துள்ளன. அவை மானிடர்க்கு எளியன ஆகுமோ? -

என்றான்:

தோள் அம்மி

"உரைத்த வாசகம் கேட்டலும் உலகெலாம் உலையச்

சிரித்து நன்று நம் சேவகம் தெவ்வரைத் தேய அரைத்த அம்மியாம் அலங்கு எழில்தோள்

அமர்வேண்டி விரைத்து வீங்குவ மானிடற்கு எளியவோ

என்றான்” (74)

தேய அரைப்பது அம்மி. இங்கே பகைவரைத் தேய்த்து அரைத்தவை தோள்கள். இந்த உவமை ஒரு புதிய சுவை பயக்கிறது.

தடுக்கப்படுகிறார்கள் என்றாலேயே, திரும்பி வர மாட்டார்கள் என்னும் கருத்து தொக்கி நிற்கிறது. பெரும் பாலானவை இத்தகையனவே. சூலியஸ் சீசரை மனைவி தடுத்தாள் - மீறி அரசவை சென்றான் - திரும்ப வில்லை.

கரன் கூறியதும் படைவீரர் இராமனை வளைத்துக் கொண்டனர். இராமனின் அம்பால் எதிரிகளின் தலைகள் அறுப்புண்ண உடல்கள் மட்டும் ஆடுகின்றன. உயிரையும் தொடர்வதுபோல் இராமன் அம்பு மேல் நோக்கிச் சென்றதாம். -

"அயில் அம்பு விண்மேல் ஓடுகின்றன

உயிரையும் தொடர்வன ஒத்த ' (81)