பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் . 161

காட்டாறு

இராமனின் அம்புகளால் இறந்த அரக்கர்களின் உடல்கள் நான்கு பக்கமும் கிடக்க, நடுவில் குருதி தேங்கி நிற்பதால் அந்தப் பகுதி ஏரி போல் தெரிந்ததாம். இருபக்கமும் கரைகள் போல் பல உடல்கள் கிடப்ப, நடுவில் குருதி ஓடுவது காடு ஆறு ஆனதுபோல் காணப்பட்டதாம்.

"மாரி ஆக்கின வடிக்கணை வரை புரை கிருதர்

பேர் யாக்கையின் பெருங்கரை வயின்தொறும் பிறங்க ஏரி ஆக்கின, ஆறுகள் இயற்றின நிறையச் சோரி ஆக்கின போக்கின வனம்எனும் தொன்மை (83) அம்புகள் குருதி மழை பெய்யச் செய்ததால், வனம் (காடு) என்னும் தொன்மைப் (பழைய) பெயர் மாறி, ஏரி எனவும் ஆறு எனவும் சொல்லும்படியான நிலைமை ஏற்பட்டது. செயற்கை ஏரி-செயற்கை ஆறு.

உயிர்ச் சுமை

இராமனின் அம்புகளால் படைஞர்கள் ஏராளமான வர்கள் இறந்ததால், அவர்களின் உயிர்களைச் சுமக்க முடியாமல் விண்ணுலகம் முதுகை நெளித்த தாம்.

'உயிர் சுமந்து உளுக்கியது உம்பர்” (87) என்பது பாடல் பகுதி, உயிர் என்பது என்ன எனத்திட்ட வட்டமாகச் சொல்ல முடியாமல் அறிவியலார் திகைத்துக் கொண்டிருக்கின்றனர் இன்று; ஆனால் அன்று உயிர் மேலேயோ கீழேயோ செல்வதாகக் கூறியது இன்றும் நம்பப்படுகின்றது. கம்பரோ உயிர்கட்கு வடிவம் தந்து விண்ணுலகால் உயிர்களின் சுமையைத் தாங்க முடியவில்லை

எனக் கற்பனை செய்துள்ளார். உம்பர் விண்ணுலகு.