பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் [...] 15

வாய்ப்பேச்சு வாயில் இருக்கும் போதே என்றால், வாயிலிருந்து ஒரு சொல் வெளி வருவதற்குள்ளேயே-என்பது கருத்தாகும். அதைத்தான், 'சொல்லும் எல்லையில்’ என்றுள்ளார் கம்பர். அதாவது மிகவும் விரைவில் நிகழ்ந்து விட்டதாம்.

முகந்து உயர் விசும்பு தொடர-உடல் முழுவதையும் தூக்கிக் கொண்டதை முகந்து என்பது அறிவிக்கிறது. ஒரு பொருளை முகத்தல் அளவையால் முகப்பது எளிது. அவ்வாறு எளிதில் பற்றிக் கொண்டானாம். பற்றி விண்ணில் மிக்க உயரத்தில் சென்றானாம். நிற்கவோ, மீளவோ இல்லை-தொடர்ந்து போய்க் கொண்டே யிருந்தான் என்பதைத் தொடர என்பது தெரிவிக்கிறது.

அடா-அடிா:

வில்லும் அம்பும் தாங்கிய இராமலக்குமணச் விதுரனை விளித்து, அடா வஞ்சகா இங்கே திரும்பிப்பார் எங்கே போகிறாய் என்று கூவினர்:

"வாளி தாங்கிய விலங்கையவர் வஞ்சனையடா

மீடி எங்கு அகறி என்பது விளம்ப அவனும்” (2)

இவர்கள் கூவியதும் விராதனும் குரல் கொடுக்கிறான். 'அடா வுக்குப் பதில் 'அடா போடுகிறான்:

அடா மானிடரே! நான்முகன் தந்த அருளிப் பாட்டால் (வரத்தால்) நான் சாகமாட்டேன். உலகமெல்லாம் என்னை எதிர்க்கினும் படைக்கலம் இன்றியே யான் வெல்ல முடியாத நிலை என்பதில்லை - உங்களுக்கு உயிர் தந்தேன் - சீதையை என்னிடம் விட்டுவிட்டு ஒடிப் போங்களடா - என்றான்.