பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 0 ஆரணிய காண்ட ஆய்வு

(Mud) குடம்போல் (Pot) சிறிய கூடு உண்டாக்கி, புழு பூச்சிகளை அக்கூட்டிற்குள் வைத்துப் பக்கத்தில் முட்டைகள் இட்டுச்சென்று விடுமாம், முட்டை யிலிருந்து வெளிவரும் குளவிப் புழுக்கள், தாய் வைத்துவிட்டுப் போயிருக்கும் புழுக்களைத் தின்று வளர்ந்து வெளிவருமாம். இதுதான் உண்மை. ஆனால், மக்கள் குளவி புழுக்களைக் கொட்டிக் கொட்டித் தன்னைப்போல் ஆக்குவதாகத் திரித்துச் சொல்கின்றனர். கம்பர் இதனை உவமையாக்கிக் கூறியுள்ளார். (இது அந்தக்கால நிலைமை).

திரிசரன் படை

இறுதியாக, முத்தலை உடைய திரிசரன் இராமனோடு பொருது ஒவ்வொரு தலையாக இழந்து மடிந்து விட்டான்; அவன் படைஞர் அஞ்சி ஒடலாயினர்.

சிலர் அம்பால் புண்பட்டுத் துளைபோடப்பட்டுள்ள யானைகளின் வ யி ற் றி னு ள் புகுந்து மறைந்து கொண்டனராம். புகும்போது, நின்று ஆடும் தலையற்ற முண்டங்களை நோக்கி, நண்பர்களே! யாங்கள் மறையும் இடத்தைக் காட்டிக் கொடுக்காதீர்கள் என்று வேண்டிப் புகுந்தனராம்:

'மண்டி ஓடினர் சிலர் நெடுங் கடகரி வயிற்றில்

புண்திறந்த மா முழையிடை வாளொடும் புகுவார்; தொண்டை நீங்கிய கவந்தத்தைத் துணைவா நீ

எம்மைக் கண்டிரேலன் எனப் புகல் என்க் கை தலைக்

கொள்வர் (148)

என்பது பாடல். முழை = குகை, பொந்து. கவந்தம் = தலையற்ற முண்டம், கைகளைத் தலைமேல் வைத்துக் கொண்டு கவந்தத்தை வேண்டினராம். மேலும் பல வகையில் தப்பினராம்.