பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 0 169

இந்த மாதிரியில் தோற்றவர்கள் தப்பித்துக் கொள்வது பற்றிய செய்தி, கம்பராமாயணம் - சுந்தரகாண்டம் - அக்ககுமாரன் வதைப்படத்தில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

மற்றும் இளங்கோவின் சிலப்பதிகாரத்திலும், சயங் கொண்டாரின் கலிங்கத்துப் பரணியிலும் உள்ளனவற்றை இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில் காண்பாம்:

சிலம்பில்:- செங்குட்டுவனின் வடநாட்டுப் போரில் தோற்ற பகைவர்கள் பலவித மாறுகோலம் கொண்டு தப்பி ஓடினராம். அதாவது, சடைமுடி தாங்கியும், காவி உடுத்தும், திருநீறு பூசியும், சமணத் துறவியர்போல் மணையும் மயில் தோகையும் ஏந்தியும், பாடும் பாணர் போலவும், பல இயங்களைக் கூத்தர்போல் தோளில் கமந்தும் மாறுகோலம் பூண்டு பல்வே றிடங்கட்கு ஓடி மறைந்து விட்டனராம்.

"சடையினர் உடையினர் சாம்பல் பூசினர்

பீடிகைப் பீலிப் பெருநோன் பாளர் பாடு பாணியர் பல்லியத் தோளினர் ஆடு கூத்த ராகி எங்கனும் ஏந்து வாள் ஒழியத் தாம் துறையோகிய விச்சைக்கோலத்து வேண்டுவயின் படர்தர”

(26:-225–230)

என்பது சிலப்பதிகாரப் பாடல் பகுதி, கலிங்கத்துப் பரணி

வருமாறு:

சோழன் படைக்கு அஞ்சிக் கலிங்க மறவர்கள் புதர் வழியாக ஒடினர். புதரில் இருந்த முட்கள் அவர்களின் உடைகளையும் தலைமயிரையும் பிய்த்து இழுத்துக் கொண்டன. இதனால் அவர்கள், சமணத் துறவியர்போல் முடியும் உடையும் உடைமையால், நாங்கள் படைஞர்