பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுத்தர சண்முகனார் () 171

என்பன பாடல்கள். இவ்வாறே தோற்ற அரக்கர்கள், பல மாயங்கள் செய்து தப்பி மறைந்தனர்.

துாடணனும் கரனும்

அஞ்சி ஒடுபவர்களை நோக்கித் தூடணன் கூறலானான்: பச்சைப் பிள்ளைபோல் அஞ்சியோடும் கொச்சைப் பேர்வழிகளைப் பெண்களும் விரும்பார். அச்சம் உயிர்க்குத்துணை யாகாது. உறுதியான துணிவே கவசம். (142)

இதுவரையும் இந்திரனோடும் தேவரோடும் மூவரோடும் புரிந்த போரில் அரக்கர் எவரும் புறமுதுகிட்டு ஓடியதில்லை, அஞ்சி ஒடிய தேவர்களிடம் நீங்களும் அஞ்சி ஒடக் கற்றுக் கொண்டீர்களோ? (143)

நீங்கள் செறிந்த காட்டு வழியிலே ஒடும்போது, மரக் கிளைகள் கிழித்த முதுகுப் புண்களை உங்கள் மனைவியரிடம் காட்டுவீரோ? அல்லது, அம்பு கிழித்த மார்புப் புண்ணைக் காட்டுவீரோ? (145) என்று இழித்துரைத்தான்.

பின்னர்த் தூடணன் தேர்மேல் ஏறிப் போர் புரிந்து இராமன் விட்ட அம்புகளால் தேர் முதலிய படைகளை எல்லாம் இழந்து தானும் மாண்டாள்.

அடுத்து மூத்தவனாகிய கரன்போருக்கு வந்தான். நீதி மன்றத்தில் வலியவர் மெலியவரை வருத்திக் கவர்ந்த பொருள் அழிவது போல் கரனுடைய படைமறவர்கள் இராமனால் அழியலாயினர்:

"மன்றிடை கலிங்து வலியோர்கள் எளியோரைக் கொன்றனர் நுகர்ந்த பொருளின் கடிது

கொன்றான் (168) நீதி மன்றத்தில் சிலர் பொய் சொல்லி வழக்கின் வென்று ஏழையரின் பொருளைத் தமத்ாக்கிக் கொள்வர்;