பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/177

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் 0 118

வடதிசை வாயில்

செவ்வானம் போல் சிவந்த கூந்தலையுடைய

சூர்ப்பணகை, முடைநாற்றம் உடைய வாயால், ஊழிக்காலக்

கடல் ஒலிபோல் கத்திக்கொண்டு இலங்கையின் வடதிசை

வாயிலாக நகருக்குள் நுழைந்தாள்:

"முடையுடை வாயினால் முறையிட்டு ஆர்த்தெழு

கடையுகக் கடலொலி காட்டக் காந்துவாள் குடதிசைச் செக்கரின் சேந்த கூந்தலாள் வடதிசை வாயிலின் வந்து தோன்றினாள்” (2)

கடையுகம்=உலகம் அழியும் ஊழிக்காலம். குடதிசைச் செக்கர்-மேற்குத் திக்கில் காணப்படும் செவ்வானம். அரக்கி இலங்கையின் வடக்கு வாயில் வழியாக நுழைந்தாள் என்பதில் பொருத்தம் உள்ளது. இந்தியாவிலிருந்து இலங்கையின் வடக்குப் பக்கமாகச் செல்வது எளிய வழியாகும்.

எவர் மேலது?

சூர்ப்பணகை அறுபட்ட உறுப்புகளுடன் அரற்றி அங்கலாய்த்துக் கொண்டு வருவதைக் கண்ட பெண்கள் மிகவும் வருந்தினர். சூர்ப்பனகையை இவ்வாறு செய்தவர் இந்திரனோ. நான்முகனோ - திருமாலோ - சிவனோ? எவர் இந்தத் தீமையைச் செய்திருக்க முடியும்? என்று கொதித்தனர் சிலர். - -

"இந்திரன் மேலதோ உலகம் ஈன்றபேர்

அந்தணன் மேலதோ ஆழி யானதோ சந்திர மவுலிபால் தங்குமே கொலோ அந்தாரம் என்று கின்று அழல்கின்றார் சிலர்'

அந்தரம்=தீமை. அந்தணன் = நான்முகன். ஆழியான்= திருமால். சந்திர மவுலி= பிறை சூடிய சிவன். இங்கே,