பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 ) ஆரணிய காண்ட ஆய்வு

செந்திரு மகளைப் பெற்றான்

சீதையைப் பெற்றாய் நீயும்” (76) 'பாகத்தில் ஒருவன் வைத்தான்,

பங்கயத் திருந்த பொன்னை ஆகத்தில் ஒருவன் வைத்தான்;

அந்தணன் நாவில் வைத்தான்; மேகத்தில் பிறந்தமின்னை வென்ற

நுண் இடையை நீயும் மாகத் தோள்வீர! பெற்றால் .

எங்ங்ணம் வைத்து வாழ்தி (76) பொன் திருமகள், ஆகம் = மார்பு. அந்தணன் = பிரமன், மின்னை வென்ற நுண் இடையுடையாள் = சீதை.

வீரனே! சிவன் உமையை இடப் பாகத்தில்வைத்தான்; திருமால் திருமகளை மார்பில் வைத்தான்; பிரமன் கலை மகளை நாக்கில் வைத்திான்; அழகிய சீதையை நீ எங்கே வைக்கப் போகிறாய்?

வள்ளலாகிய அண்ணா! நீ சீதையைப் பெற்று விடின் எல்லாப் பேறுகளையும் அவளுக்கே கொடுத்து விடுவாய். அதனால் நான் உனக்கு நல்லவளாக இருக்கலாம். ஆனால் உன் அந்தப்புரத்தில் உள்ள உன் மற்ற மனைவிமார்கட் கெல்லாம் யான் கேடு செய்தவள் ஆவேன் அல்லவா?

'பிள்ளைபோல் பேச்சி னாளைப்

பெற்றபின் பிழைக்க லாற்றாய் கொள்ளை போகின்ற செல்வம்

அவளுக்கே கொடுத்தி ஐயா! வள்ளலே உனக்கு நல்லேன்

மற்றுகின் மனையில் வாழும் கிள்ளைபோல் மொழியார்க் கெல்லாம்

கேடுகுழ் கின்றே னன்றோ" (77)