பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/185

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் 0 183

பிள்ளைபோல் பேச்சினாள் = சீதை. பெண்டிர் பலரும் கொள்ளை கொண்டு செல்வம் நுகர்கின்றார்களாம். பல பெண்டிருக்கும் நுகரும் உரிமையும் உடைமையும் கொடுத்திருப்பதால் வள்ளலே’ என்றாள்.

உன் மனையில் மனைவியரா யுள்ள கிளிபோன்ற மொழியார்க்கு எல்லாம் தான் கேடு சூழ்வதாகக் கூறுவதன் வாயிலாக, கிடைத்தற்கு அரியவள் சீதை எனச் சீதையின் மீது அவனுக்குக் காம வெறி ஏறும்படித் தூண்டுகிறாள்.

அண்ணா! பத்து முகங்களும் இருபது கண்களும் இருபது தோள்களும் உயர்ந்த உருவமும் பரந்த மார்பும் பெருத்த செல்வமும் உடைமை காரணமாக நீ இதற்கு முன்பே சீதையைப் பெற்றிருக்கவேண்டும். சீதையை இன்னும் நீ பெறாததால், நீ வேறு இவ்வளவு பெற்றும் என்ன பயன்? என்ன தான் - எவ்வளவு தான் தவம் இயற்றினும், விதி என ஒன்று இருப்பதால், எதுவும் கிடைக்க வேண்டிய காலத்தில்தான் கிடைக்கும்.

'தருவது விதியே என்றால்

தவம் பெரிது உடையரேனும் வருவது வரும்நாள் அன்றி

வந்து கைகூட வற்றோ ஒருபது முகமும் கண்ணும்

உருவமும் மார்பும் தோள்கள் இருபதும் படைத்த செல்வம்

எய்துவது இனி நீ எந்தாய்” (80)

அண்ணா உனக்கு இப்போதுதான் நல்ல காலம்

வந்துள்ளது - இதை நழுவ விடாதே என்னும் பொருளில் இதைக் கூறியுள்ளாள். ஈண்டு,