பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/186

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


184 ( ஆரணிய காண்ட ஆய்வு

“அடுத்து முயன்றாலுங் ஆகுநாள் அன்றி

எடுத்த கருமங்கள் ஆகா’ (5) என்னும் ஒளவையின் மூதுரைப்பாடலும், திருக்குறளில் உள்ள -

'பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்

சொரியினும் போகா தம” (376) 'வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.” (377)

என்னும் பாக்களும் எண்ணத் தக்கன. இராவணனுக்கு இப்போதுதான் ஆகூழ் தோன்றியுள்ளது என்பதாகக் கூறியுள்ளாள்.

கலந்த

இவ்வளவு நேரம் தங்கையின் மூக்கை எவனோ அறுத்து விட்டானே என்பதனால் ஏற்பட்ட சினம், மறம், மானம், எல்லாம், தீவினை உள்ள இடத்தில் நோன்பு நிலைக்காதது போல், காம நோய் ஏற்பட்டதும் பறந்து போயின. ஒரு விளக்கிலிருந்து இன்னொரு விளக்கு பொருத்தப்படுவது போல், காமநோயிலிருந்து வெப்பம் தோன்ற, அவை இராவணனது உயிரோடு கலந்து விட்டன:

'கோபமும் மறனும் மானக்

கொதிப்பும் என்று இனைய எல்லாம் பாபம் கின்றிடத்து கில்லாப்

பெற்றிபோல் பற்று விட்ட, தீபம் ஒன்று ஒன்றை உற்றால்

என்னலாம் செயலில் புக்க தாபமும் காம நோயும்

ஆருயிர் கலந்த அன்றே” (82)