பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 ) ஆரணிய காண்ட ஆய்வு

என் நெஞ்சே! காதலர் உன்னகத்தே உள்ள போது நீ வேறு யாரை (எதை) நினைக்க முடியும் - என்னும் கருத்துடைய -

'உள்ளத்தார் காத லவராக உள்ளிரீ

யாருழைச் சேறிஎன் நெஞ்சு' (1249)

என்னும் குறள் ஈண்டு எண்ணத் தக்கது. அதாவது, ஒன்று உள்ளபோது மற்றொன்றை நினைக்க முடியாது என்பது கருத்து.

நினைக்க வேண்டியதை விட்டு அந்த நேரத்தில் வேறு ஒன்றை நினைப்பதற்குத் தான் மறதி என்பது பெயர் என உளவியலார் கூறுகின்றனர்.

காதலரை மறக்காமல் நினைத்துக் கொண்டே யிருப்பதால் நாணத்தை மறந்து விட்டேன் என்னும் கருத்துடைய - .

'காணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்

மாணா மடநெஞ்சிற் பட்டு’ (1297) என்னும் குறள் ஈண்டு நினைக்கத் தக்கது. அவரை மறக்காமல் நினைத்துக் கொண்டிருப்பதால் நாணத்தை மறந்து விட்டேன் என்கிறாள் காதலி. ஒன்றை விட்டு ஒன்றை நினைப்பதுதான் மறதி என்பது இதனால் பெறப் படலாம். நினைவு மாற்றமே மறதியாகும்.

எனவேதான், இராவணன் மனம் சீதை என்னும் பெயரோடு ஒன்றிவிட்டதால், வேறு நினைக்க வேண்டு மாயின் வேறொரு மனம் வேண்டும் என்றார். ஈண்டு,

“இரண்டு மனம் வேண்டும் - கினைந்து வாழ ஒன்று -

மறந்து வாழ ஒன்று”

என்னும் ஒரு திரையோவியப் பாடல் பகுதி ஒப்புநோக்கத் தக்கது. ஒருவேளை, இந்தத் திரையோவியப் பாடல்