பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் to 17

'வீரனும் சிறிது மென் முறுவல் வெண்ணிலவு உக” (22)

முறுவல் நிலவாக உருவகப்படுத்தப் பட்டுள்ளது. கிட்கிந்தா காண்டத்திலும் முறுவல் நிகழ்ந்துள்ளது. இராமனது வலிமையை ஆய்வு செய்யச் சுக்கிரீவன் மரா மரத்தை அம்பெய்து துளைக்கும்படிக் கேட்டபோது இராமன் புன்முறுவல் பூத்தானாம்:

"மறு இலான் அது கூறலும் வானவர்க்கு இறைவன்

முறுவல் செய்து” (4 : 2) என்பது பாடல் பகுதி. மறு இலான் சுக்கிரீவன். வானவர்க்கு இறைவன் இராமன். மற்றோரிடத்திலும்

“சிறந்தது போரே என்றான் சேவகன் முறுவல் செய்தான்” என்று கூறப்பட்டுள்ளது.

வஞ்சகப் பூசை

அனைவரும் அஞ்சத் தக்க ஒலியெழும்படி இராமன் வில்லின் நாணை அதிர்த்து ஒலியெழச் செய்தான். கேட்ட விராதன் சிறிது கலக்கமுற்றுப் பின் பூனை வாயில் அகப் பட்ட கிளிபோல் கதறிக் கொண்டிருந்த சீதையை விடுத்து, ஏதோ எண்ணிப் பார்த்து இராமனோடு போர் தொடுக்க லானான்.

'வஞ்சகக் கொடிய பூசை நெடு வாயில் மறுகும் பஞ்சரக் கிளி எனக் கதறு பாவையை விடா நெஞ்சு உளுக்கினன் எனச் சிறிது கின்று கினையா

அஞ்சனக் கிரி அனான் எதிர் அரக்கன் அழலா’ (24)

பூசை = பூனை. பஞ்சரம் = கூண்டு. விடா = விட்டு; அழலா = அழன்று - இவை இரண்டும் செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம், அஞ்சனக் கிரி அனான் = கரிய மலை போன்ற இராமன். பாவை = சீதை.