பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/191

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் 0 189

எரிக்கும் பணி

இராவணனைப் பனிப்பருவமே வெப்பமாக எரித்த தென்றால், வேனில் பருவம் எரிப்பதற்குச் சொல்லவா வேண்டும்! இன்பமோ - துன்பமோ மனத்தைப் பொறுத்தே அமையும். மனம் காம வெப்பத்தைத் தாங்க இயலாமை யால் மிகவும் துன்பப்படுகிறான் இவன்: "மென்பனி எரிந்த தென்றால்

வேனிலை விளம்ப லாமோ?.... இன்பமும் துன்பம் தானும்

உள்ளத்தோடு இயைந்த அன்றே (100) ஊருக்குள் தீப்பற்றி எரிந்தால், தண்ணீருக்குள் முழுகி வெப்பத்தினின்றும் தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், காமத் தீயானது நீருக்குள் மூழ்கினும் சுடும்; மலைமேல் ஏறி மறையினும் சுடும் என்னும் கருத்துடைய, 'ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு

நீருள் குளித்தும் உயலாகும் - நீருள் குளிப்பினும் காமம் சுடுமே குன்றேறி ஒளிப்பினும் காமம் சுடும்’ (20) என்னும் நாலடியார்ப் பாடல் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது.

இந்தப் பாடலில் ஓர் உயரிய கருத்தைக் கம்பர் அறிவித்துப் போந்துளார். அதாவது:- இன்பம் GT65T ஒன்றோ துன்பம் என ஒன்றோ இல்லை; இன்பமோதுன்பமோ, அவரவரது மன நிலையைப் பொறுத்தோ நேரத்தைப் பொறுத்தோ இருக்கும்.

ஒரு துன்பம் நேரிட்டால் ஒருவர் பொறுக்க முடியாமல் வருந்தலாம் - மற்றவர் பொருட்படுத்தாது போகலாம்இதற்குத்தான் வள்ளுவர் இடுக்கண் வருங்கால் நகுக'

என்றார்,