பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 ஆரணிய காண்ட ஆய்வு

இங்கே வருவோம்: பேராற்றல் பெற்ற இராவணன் ஒரு பெண்ணை நினைந்து இவ்வளவு வேதனைப்படுவது தேவையில்லாத ஒன்று. இது மனம் திருந்தாமையால் நேர்ந்தது.

கம்பர் இலக்கிய மரபுகளை ஒட்டி, இராவணன் காம வெறியால் பட்ட பாடுகளைப் பல பாடல்களால் - பல கோணங்களில் நின்று கற்பனை செய்துள்ளார். இவ்வளவு கூற வேண்டியது தேவையா என்ற எண்ணம் வருமாயின், ‘இலக்கிய மரபு' என்னும் துருப்பு கொண்டு வெட்டி நிலைமையைச் சமாளிக்க வேண்டும் கதைக்குக் கட்டாய மாகத் தேவைப்படாத கற்பனைகள் எனினும், பாடல்கள் மிகவும் சுவைக்கத் தக்கவை. -

நிலை தடுமாறிய இராவணன், தம் மாமன் மாரீசனின் உதவியால் சீதையைக் கவரலாம் என்றெண்ணி மாரீசன்பால் சென்றான். மாரீசன் வரவேற்று வந்த காரியம் யாதென வினவ இராவணன் கூறலானான்.

நம் பெருமையும் புகழும் போயின. இன்னும் உயிர் வாழ்கிறேன். உனக்கு எங்ங்ணம் உரைப்பேன். நாம் நானும் நிலை நேர்ந்து விட்டது. (173)

மானிடர் தம் வாளால் உன் மருகி சூர்ப்பணகையின் மூக்கை அறுத்து விட்டனர். என் மரபுக்கும் நின்மரபிற்கும் இதற்குமேல் மானக்கேடு வேறு யாதுளது?

'வன்மை தரித்தோர் மானிடர் மற்றங் கவர் வாளால்

கின்மருகிக்கு நாசி இழக்கும் நிலை நேர்ந்தார் என்மரபுக்கும் கின்மரபுக்கும் இதன்மேல் ஓர் புன்மை தெரிப்பின் வேறினி மற்றென் புகழ்வேலோய்” (174)