பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/193

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் [[]] 191

மாமன்மாரீசனுக்கு இராவணன் மருகன் முறையாதலால் சூர்ப்பணகை மருகி எனப்பட்டாள். இராவணன் தன் மரபுக்கு இழுக்கு என்று மட்டும் சொல்லாமல், நின் மரபுக்கும் இழுக்கு என்று கூறி மாரீசனுக்கு வெறியேற்றி

யுள்ளான்.

மற்றும், இராவணன் மாரீசனைப் புகழ் வேலோய்” என விளித்துளான். இதனால், புகழோடு வீரமும் உடைய வனாகிய நீயும் என்னுடன் சேர்ந்து தக்க நடவடிக்கை எடுக்கவேண்டு மெனத் தூண்டுகிறான்.

மேலும் கூறுகிறான். அந்த எளிய மானிடரோடு போர் புரிதல் நம் தகுதிக்கு இழுக்கு என்றெண்ணி, இராமன் மனைவி சீதையை உன்னைக் கொண்டு எடுத்து வந்து, பழிக்குப் பழி தீர்த்துக் கொள்ளலாம் என எண்ணி வந்தேன்.

'துப்பு:அழி செவ்வாய் வஞ்சியை

வெளவத் துணை கொண்டிட்டு இப்பழி கின்னால் தீரிய

வந்தேன் இவண் என்றான்” (176) துப்பு = பவளம், பவளம் தோற்கும் செவ்வாயை உடையவளாம் சீதை. தீரிய = தீர்க்க- செய்யிய' என்னும் வாய்பாட்டு வினையெச்சம் இது.

சிச்சி

இராவணன் கூறியதைக் கேட்டதும், மாரீசன், ச்சி- ச்சீ என்று கூறித் தன் காதுகளைக் கைகளால் பொத்திக் கொண்டு அச்ச மின்றிச் சினமிக்க உள்ளத்தோடு கண்டிக்கலானான்.

"சிச்சி யெனத்தன் மெய்ச்செவி பொத்தித் தெருமந்தான் அச்சம் அகற்றிச் செற்ற மனத்தோடு •pದಿಹpಣ್ಣೆ

(177)