பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்தர சண்முகனார் 19:

யெனினும், நல்லது சொல்ல வேண்டியது என் கடமை. நீ அரும்பாடு பட்டுச் செய்த தவத்தால் பெற்ற பயனை இப்போது இழக்கப் பார்க்கிறாய் (178, 179)

அறம் ஒறுக்கும்

நட்பரசரின் நாட்டை வஞ்சகமாகக் கவர்ந்தவர், அளவு மீறிக் குடிமக்களை வருத்தி வரி வாங்குபவர், மாற்றார் மனைவியைப் பெண்டாள்பவர் ஆகியோரை அறக்கடவுள் ஒறுக்கும். கொடியவர் எவரும் தப்பித்துக் கொண்டதில்லை.

'நாரங் கொண்டார் நாடு கவர்ந்தார் நடையல்லா

வாரங் கெர்ண்டார் மற்றொருவற்காய் மனைவாழும் தாரங் கொண்டார் என்றிவர் தம்மைத் தருமம்தான் ஈரும் கண்டாய் கண்டகர் உய்ந்தார் எவர் ஐயா?”

- . (181) நண்பர் போல் நடித்து அவர் பதவியைத் தாம் பறித்துக் கொண்டவர்களை வரலாறு அறியும்.

முடியரசு என்றென்ன - குடியரசாட்சியிலும் அளவு மீறி வரி போடுபவரை, அடுத்த தேர்தலில் பொது மக்கள் கவனித்துக் கொள்வார்கள் என்பது நினைவுகூரத்தக்கது.

பிறர் பெண்டாள்பவர் மீது மக்களுக்கு இருந்த பெருமை, புகழ், நம்பிக்கை அற்றுப்போகும்; காசு பணமும் அழியும்; பிணியும் வ ர ேவ ற் க எதிர்பார்த்துக் காத்திருக்கும். -

இவர்களை அறம் ஒறுக்கும் என்றால், இவர்கள் தம்மைத் தாமே அழித்துக் கொள்வார் என்பதாகும்.

மேலும் கூறுவான் மாரீசன்:

அகலிகைபால் கொண்ட காமத்தால் அழிந்த இந்திரன் போன்றாரை அறியாயா? உன் அந்தப்புரத்தில் அழகிகள் பலர் உனக்கு இன்பம் தருவது போதாதா?