பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/197

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் 0 19s

வாயிலாகக் கம்பர் இதனைக் கூறியுள்ளார். இது ஒரு புதுமைச் சுவையாகும். இங்கே,

'தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம்’ (305) "சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்

ஏமப் புணையைச் சுடும்” (306) என்னும் குறள்கள் எண்ணத்தக்கன.

மேலும் கூறுவான்: சீதை என்பது ஒரு பெண் உரு அன்று; அரக்கர் குலத்தை அழிக்க வந்த தீவினையின் உரு

அது:

"சீதை உருவோ கிருதர் தீவினை அது அன்றோ" (193) நீ குலத்துடன் அழியப் போகிறாய் என என் நெஞ்சு பறை என அடித்துக் கொள்கிறது. நீ அறியாது செய்கிறதை நான் தடுக்கிறேன். நஞ்சு பருக முயல்வோரை இது நல்லதே என்று கூறுவதுண்டோ? அவர்களைத் தடுக்குமாறு போலவே உன்னையும் தடுக்கிறேன்.

“நஞ்சு நுகர்வாரை இது கன்று எனலும் நன்றோ (194)

ஏவலும் காவலும்

மீண்டும் இராவணன் வெகுண்டு மாரீசன் மேல் சீறுகிறான்: மாமா! நீ என் கட்டளைப்படி ஏவல் செய்ய வேண்டும்; எனக்கு அறிவுரை கூறிக் காவல் புரியும் அமைச்சர் வேலை உன்னுடைய தன்று:

'ஏவல் செய்கிற்றி எனது ஆணை வழி எண்ணிக்

காவல் செய் அமைச்சர் கடன் கேடவது உண்டோ?”

(200) என் ஏவல்படி நடவாயாயின் உன்னைக் கொல்வேன்

என்றான் இராவணன்.