பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 ஆரணிய காண்ட ஆய்வு

உருக்கிய செம்பு நீர்

தன்னைக் கொல்வேன் என்று இராவணன் சொன்னதைக் கேட்டதும், மாரீசன், கொடியவர் அழிவர் என்பது உண்மை. இவர்களைத் திருத்தமுடியாது என எண்ணி, உருக்கிய செம்பில் உற்ற தண்ணிரைப்போல் அடங்கிக் கூறுவான்:

"உருக்கிய செம்பின் உற்ற நீரென உரைக்க லுற்றான்” (202) உருக்கிய உலோகத்தில் பட்ட நீர் வெளித்தெரியாது அடங்கிவிடும் என்னும் ஒப்புமையை, பிரபுலிங்க லீலையில் வெம்மையின் நிலையைக் கூறுகிற

"தழல்பட்ட வல் இரும்பின்மேல்

நகம்தெறி திவலைபோல் சுவறுறும்” (7:49) என்னும் பாடல் பகுதியிலும் காணலாம்.

இராவணா! உன் நன்மை கருதிச் சொல்லும் நல்லனவும் அழிவு வருங்காலத்துத் தீமையாய்த் தோன்றும். சரி, யான் செய்ய வேண்டியதைச் சொல் என்றான்:

"நன்மையும் தீமை அன்றே நாசம் வந்துற்ற போது

புன்மையின் கின்ற நீராய் செய்வது புகல்தி என்றான்” (203)

சீதையைத் தருதி

யான் செய்ய வேண்டியதைத் தெரிவி என்று மாரீசன் சொன்னதும், இராவணன் எழுந்து அவனைத் தழுவிக் கொண்டு, சினம் நீங்கி, மலைபோன்ற தோளையுடைய மாமா! மன்மதனின் மலர் அம்பால் மாள்வதனினும், இராமனைப் பகைத்துக் கொண்டு அவனது அம்பால் அழிவது மேலானது; எனவே, தென்றலைப் பகைக்கச் செய்த சீதை எனக்குக் கிடைக்க உதவுவாயாக என்றான்: