பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 0 197

'என்றலும் எழுந்து புல்லி

ஏறிய வெகுளி நீங்கிக்

குன்றெனக் குவிந்த தோளாய்

மாரவேள் கொதிக்கும் அம்பால்

பொன்றலின், இராமன் அம்பால்

பொன்றலே புகழ் உண்டன்றோ

தென்றலைப் பகைக்கச் செய்த

சீதையைத் தருதி என்றான்” (204)

இந்தப் பாடல் மிக்க சுவை உடையது. தன் ஏவலைச் செய்ய மாரீசன் ஒப்புக் கொண்டதும், அமர்ந்திருந்த இராவணன் எழுந்து நின்றானாம் - மாமாவைத் தழுவிக் கொண்டானாம் - சினத்தை விட்டானாம் - மிக்க வலிமை உடைய நீ முயன்றால் முடியாதது என்ன என்று (பாட்டரிக்குச் சார்ஜ் பண்ணுவது போல) வெறியேற்றும் பொருளில் குன்றெனக் குவிந்த தோளாய் என்று விளித்தானாம்.

மன்மதன் மலர் அம்புகளை எய்து காமத்தை மிகுப்பானாம். தாமரை, அசோகு, மாம்பூ, முல்லை, நீலம் ஆகிய ஐந்தும் அவனுடைய மலர் அம்புகள். ஒவ்வொன்றாய்ப் போடப் போடக் காமம் நஞ்சுபோல் ஏறிக் கொண்டே யிருக்கும். கடைசியான ஐந்தாவது அம்பு எய்தால் இறப்பும் நேருமாம்.

எனவேதான், மன்மதனது மலர் அம்பால் சாவதனினும், இராமனைப் பகைத்துக் கொண்டு அவன் அம்பால் சாகிறேன்; நீ எப்படியாவது அவன் மனைவி சீதையை யான் அடையும்படிச் செய்க என்றான்.

பாடலின் இறுதியில் உள்ள தென்றலைப் பகைக்கச்

செய்த சீதை' என்பது நயமான பகுதி. சீதையைப் பற்றிய நினைவால் காமத் தீ கொழுந்து விட்டு எரிகிறது. குளிர்ந்த