பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/200

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


198 D ஆரணிய காண்ட ஆய்வு

பொருள் எது மேலே படினும் காமத் தீ பெருகுவதாகக் கூறுவது மரபு. இராவணன் மீது வில்கின்ற தென்றல் அனல் குழம்பை வீசுவதுபோல இருந்ததால் தென்றல் மேல் சினம் கொண்டானாம்.

"தென்றல் வந்து எதிர்ந்தபோது சீறுவானும் ஆயினான் (94) என முன்னரே இது கூறப்பட்டுள்ளது. எனவேதான், தென்றலைப் பகைக்கச் செய்த சீதை' என்றான் இப்போது.

g

காமவெப்பத்தால் கருகுவோர் தென்றலை வெறுப்பதான செய்தி இலக்கியங்கள் பலவற்றில் இடம் பெற்றுள்ளது. இலக்கிய ஒப்புகை காண்டல் என்னும் முறையிலும் கம்பர் பாடலுக்கு அரண் செய்யும் வகையிலும் பிரபு லிங்க லீலை என்னும் நூலில் உள்ள ஒரு பாடலை இங்கே காணலாம்.

அல்லமர் என்பவர் மேல் கொண்ட காதலால் ஏற்பட்ட காமநோய் வயப்பட்ட மாயை என்பவள் தென்றலை வெறுத்துக் கூறுகிறாள்.

கொல்லா நோன்பு கொண்ட முனிவர் உள்ள பொதிகை மலையில் தோன்றிய பொல்லாத தென்றலே! நீ என்னைக் கொல்கின்றாயே இரக்கம் இல்லையா! உன்னிடம் நஞ்சின் கொடுமையைத் தவிர அமிழ்தின் சுவையை எதிர்பார்க்க முடியுமா? நின்னை வெறுப்பது அறியாமையே - என்னும் கருத்துடைய பாடல் வருமாறு:

'கொல்லா நோன்பு முனிமலையில்

தோன்றி என்னைக் கொல்கின்றாய் பொல்லா மந்த மாருதமே

என்னோ கருணை பூண்டிலாய் சொல்லாய் திருப்பாற் கடலினிடைத் தோன்றும் கடுவின் தன்குணமே அல்லால் அமுத குணமுண்டோ

கின்னை வெறுப்பது அறிவு.அனறே' (5:62)