பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர் சண்முகனார் ) 205

பயிற்சிசெய்துகாட்டி - மாதிரிப்பாடம் (Model class) கற்றுக் கொடுப்பது போல் இருந்ததாம் இதன் விரைவான ஒட்டம். ‘மிதித்தது மெல்ல மெல்ல, வெறித்தது வெருவி மீதில்

குதித்தது செவியை நீட்டிக் குரபதம் உரத்தைக் கூட்டி, உதித்தெழும் ஊதை உள்ளம் என்றிவை உருவச் செல்லும் கதிக்குஒரு கல்வி வேறே காட்டுவது ஒத்தது அன்றே”

(242)

குரம் = குளம்பு, பதம் = கால், உரம் = மார்பு, ஊதை - காற்று, தென்றல் காற்று மெல்லச் செல்லுமாதலின், விரைந்து வீசும் ஊதைக் காற்று சொல்லப் பட்டது. கதி = விரைந்த செலவு. ஒரு கல்வி வேறு = புதிதாக ஒரு கல்விப் பயிற்சி. காட்டுவது = செய்து காட்டல் = மாதிரிப் பயிற்சி தருதல்.

கம்பர் இவ்வாறு கூறியிருப்பதைக் கொண்டு, இயற்கைப் பொருள்களை அவரது உற்று நோக்கும் திறன் (observation) தெரியவரும்.

மானின் மாயவேலைகள்

மாயமான், மலை மீது தாவும், முகில் குழாத்தினிடையே குதிக்கும். நெருங்கிச் செல்லும்போதுஅகன்றுஒடும். இராமன் மெதுவாகச் செல்லின், தொடக் கூடிய அளவில் தானும் மெதுவாகச் சென்று ஏய்க்கும்; நிற்பதுபோல் காட்டி இராமன் நெருங்கியதும் ஒடும்; இவ்வாறாக, கொடுக்கும் பொருளுக்கு ஏற்ற அளவு அன்பு காட்டும் விலைமகளிர் போல் செயல்பட்டது.

"குன்றிடை இவரும்; மேகக்

குழுவிடைக் குதிக்கும்; கூடச் சென்றிடின் அகலும்; தாழின்

தீண்டலாம் தகைமைத் தாகும்;