பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/210

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


208 ஆரணிய காண்ட ஆய்வு

மீள்வதே நலம்

மாரீசன் மாளவரவில்லை. இவன் செயலைக் கொண்டு, பின்னால் ஏதம் நடக்க இருக்கிறது. அது நடைபெறா முன்னம் சீதையை அடைய. மீள்வதே நலம் என இராமன் மீளலானான்:

"மாள்வதே பொருளாக வந்தா னலன்

சூழ்வதோர் பொருள் உண்டு.இவன் சொல்லினால் முள்வது ஏதம் அது முடியாமுனம் மீள்வதே நலம்என்று அவன் மீண்டனன்” (253) பின்னால் மூள இருப்பது இராவணன் சீதையை எடுத்துச் செல்லல். இது போல் ஏதாவது நடந்து விடக் கூடாதாதலின் விரைந்து மீள்வது நலம் என்று இராமன் மீண்டான்.