பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. சடாயு உயிர் நீத்த படலம்

சீதையை எடுத்துச் சென்ற இராவணனோடு சடாயு போரிட்டு உயிர் விட்டதைப் பற்றிய படலம் இது. சடாயு மோட்சப் படலம், சடாயு வதைப் படலம் எனச் சில ஒலைச் சுவடிகளில் பெயர்கள் கூறப்பட்டுள்ளன.

சீதையின் மயக்கம்

மாரீசன் இராமன் அலறுவது போன்ற குரலில் வஞ்சகமாய்க் கூவியதைக் கேட்ட சீதை, இராமனுக்கு ஏதோ இன்னல் நேர்ந்ததாக அஞ்சி, கிளையிலிருந்து குயில் கீழே விழுந்தாற் போன்று தரையில் விழுந்து வயிற்றில் அடித்துக் கொண்டு மயங்கினாள்:

'எயிறு அலைத்து முழை திறந்து ஏங்கிய

செயிர் தலைக் கொண்ட சொல் செவி சேர்தலும் குயில் தலத்திடை உற்றதொர் கொள்கையாள் வயிறு அலைத்து விழுந்து மயங்கினாள்” (2) எயிறு = பல். முழை = குகை குகை போன்ற வாய். செயிர் = வஞ்சகம், துன்பம் வந்த போது வயிற்றில் அடித்துக் கொள்வது உண்டு. இது பெண்கட்கு மிகுதி.

- சீதை இலக்குவனை நோக்கி, உன் அண்ணனுக்கு ஏதோ இடுக்கண் நேர்ந்துளது என்பதை அவரது குரலால் அறிந்தும், அங்கே ஓடாமல் என் அருகில் நின்று கொண்டிருக்கிறாயே எனக் கடிந்து கூறினாள். (4) பெண்புத்தி

இலக்குவன் சீதையிடம் கூறுவான்: என் அண்ணனை வெல்பவர் எவரும் இலர். அவருக்கு ஒரு தீங்கும் வராது.