பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 d ஆரணிய காண்ட ஆய்வு

எல்லா உலகமும் எதிர்க்கினும் அவர் வெல்வார். நீங்கள் பெண்புத்தியால் உண்மையுணராது வருந்துகிறீர்.

“பெண்மையால் உரை செயப் பெறுதிரால்' (5) பெறுதி என்றால் ஒருமை; பெறுதிர் என்றால் பன்மை. இங்கே இலக்குவன் அண்ணியைச் சிறப்புப்பன்மை தந்தே குறிப்பிட்டுள்ளமை அவனது உயர் பண்புக்கு எடுத்துக் காட்டாகும். இது கம்பரின் கைவரிசை.

ஒரு பகல் பழகல்

இலக்குவனது உரையைக் கேட்ட சீதை, சினங்கொண்டு, உயர்ந்தோர் ஒரு நாள் பழகினும் உயிர் கொடுப்பர். நீயோ அண்ணனுக்காக வருந்த வில்லை. நான் காட்டுத் தீயில் வி ழு ந் து இறக்கப் போகிறேன் என்று அச்சுறுத்தினாள்:

'ஒருபகல் பழகினார் உயிரை ஈவரால்

பெருமகள் உலைவுறு பெற்றி கேட்டும்ே வெருவலை கின்றனை வேறுஎன் யானினி எரியிடைக் கடிது வீழ்ந்து இறப்பன் ஈண்டெனா” (13)

பாட்டின் முதல் அடி,

"ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை

இங்கிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே” (34) என்னும் நறுந்தொகைப் பாடலில் உள்ள ஒருநாள் பழகினும் என்பதை நினைவூட்டுகிறது.

இவர்கள் இருப்பது காட்டுப் பகுதி யாதலின், ஒரு மூலைக்கு ஒரு மூலை எங்கேயாவது மூங்கில்கள் ஒன்றோ. டொன்று இழைந்து தீ தோன்றிக் கொண்டிருக்கும். அதனால்தான் 'கடிது வீழ்ந்து' என்றாள். புதிதாகத் தீ மூட்ட வேண்டிய தில்லை - முதலிலேயே தீ உள்ளது என்பதைக் கடிது’ என்பதால் உய்த்துணரலாம்.