பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் b 211

ஆ | ஊ - என்றால் நெருப்பில் வீழ்வது பெண்களின் இயல்பு போலும், இன்று, எரி வாயு அடுப்பு வெடித்து இறந்தார் - மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு எரிந்து இறந்தார் - என்ற செய்திகள் அடிக்கடிச் செய்தித் தாள்களில் வந்து கொண்டுள்ளன.

அன்று, கணவன் இறப்பின் தீப்பாய்ந்து இறப்பது வழக்கமாயிருந்தது. நான்மணிக்கடிகை என்னும் நூல், அன்புடையாரைப் பிரிந்திருப்பதனினும் தீப்பாய்தல் நன்று என்னும் பொருளில்,

'பசைந்தாரின் தீர்தலின் தீப்புகுதல் நன்று' (13) என்று கூறுகிறது. கணவனை இழந்த எனக்குத் தாமரைத் தடாகமும் நெருப்புக் குழியும் ஒன்றே எனப் பூதப் பாண்டியன் இறந்தபோது அவன் தேவி பெருங்கோப் பெண்டு கூறினாள்: - -

'பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்பற

வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை நள்ளிரும் பொய்கையும் தீயும் ஒரற்றே'

246 : 13, 14, 15) என்பது புறநானூற்றுப் பாடல் பகுதி.

தாமரைத் தடாகம்

“தாமரை வனத்திடைத் தாவும் அன்னம்போல்

தூமவெங் காட்டெரி தொடர்கின்றாள் தனை சேமவில் குமரனும் விலக்கிச் சீறடிப் பூமுக நெடுநிலம் புல்லிச் சொல்லுமால்'

தாமரைத் தடாகத்திற்குத் தாவும் அன்னம் போல் காட்டெரி நோக்கிச் சென்ற சீதையின் காலடி நோக்கித் தரையில் விழுந்து இலக்குவன் தடுத்தான்.