பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 ) ஆரணிய காண்ட ஆய்வு

நாகுழறல் -

தேவரும் வியக்கும் தோற்றமுடைய இராவணன், தவக்குடிலின் வாயிலை அடைந்து, நாக்கு அடியோடு குழற, இங்கே யார் உளிர் என்று நடுக்கத்தோடு கேட்டான்:

"தோம்அறு சாலையின் வாயில் துன்னினான்

நாமுதல் குழறிட நடுங்கு சொல்லினான் யாவிர் இவ்விருக்கையுள் இருந்துளிா என்றான் தேவரும் மருள்கொளத் தெரிந்த மேனியான்' (24) இப்படி ஒரு தவ முனிவரைக் கண்டதில்லையே எனத் தேவரும் திகைக்கும்படியான கோலத்துடன் சென்றுளான். அச்சத்தோடும் நடுக்கத்தோடும் பொய்யான வஞ்சகப் பேச்சு பேசும்போது நாக்கு குழறித் (குளறித்) தடுமாறுவது இயல்பு.

கம்பன் விழாக்களில் பட்டி மன்றங்களிலும், வழக்காடு மன்றங்களிலும் நகைச்சுவையை வாரிக்கொட்டிக் கம்ப ராமாயணக் சுவைஞர்களைப் பழக்கி விட்டதால், இங்கேயும் நகைச்சுவை கலந்து எழுதவேண்டியுள்ளது. ஒன்று:

ஒரு பண்ணையார் வீட்டில் பண்ணையார் வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்வதற்காகப் பணியாளை நோக்கிச் சுண்ணாம்பு எடுத்து வரச் சொன்னார். அவன் கொட் டடிக்குள் சென்றான். சுண்ணாம்புக் கலயத்தின் பக்கத்தில் பிண்ணாக்குப் பானையும் இருந்தது. வாய் வெறிப்பா யிருந்ததால் அவன் சிறிது பிண்ணாக்கை எடுத்து வாயில் போட்டுக் குதப்பிக் கொண்டிருந்தான். அப்போது பண்ணையார், இன்னுமா எடுத்து வருகிறாய் என்று அதட்டினார். அவன், பிண்ணாக்கு வாயுடன், கையில் சுண்ணாம்பை எடுத்துச் சென்றான். நேரம் ஆய்விட்ட தாலும் பிண்ணாக்குத் திருடித் தின்பதாலும் அவனுக்கு அச்சமும் நடுக்கமும் ஏற்பட்டன. வாயில் என்ன என்று பண்ணையார் கேட்டார். அவன் வாயில் பிண்ணாம்பு'