பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் () 219

கொள்ளலாமா? ஈண்டு என்பதற்கு விரைந்து செல்லுதல் என்னும் பொருளும் உண்டு.

'இடுக்கண் களைதற்கு ஈண்டெனப் போக்கி"

சிலம்பு - 13:101) என்னும் பகுதி காண்க. போகிறேன் என்பதற்கு வருகிறேன் என்று கூறும் எதிர்மறையான வழக்காறும் எண்ணத்தக்கது.

ஆசை வேலை

யானைக்கு மதம் வழிவதுபோல் வியர்வை தோன்றிய மேனியுடன், அன்பாகிய அலைபுரளும் ஆசையாகிய கடலானான் அவன்:

வெற்பிடை மதம்என வியர்க்கும் மேனியன்

அற்பினின் திரைபுரள் ஆசை வேலையன்' (26) வெற்பு = மலைபோன்ற யானை, ஆசை = காமம், வேலை = கடல். ஏதாவது ஒரு மன எழுச்சி தோன்றின் வியர்ப்ப துண்டு. கடல் அனைய காமம் உடையவனாம். ஈண்டு,

'யாதனின் பிரிவாம் மடங்தை

காதல் தானும் கடலினும் பெரிதே' (166:9,10) என்னும் நற்றிணைப் பாடலும் பெரிய புராணத்தில் உள்ள

'ஏர்பரவை இடைப்பட்ட என்ஆசை எழுபரவை’ (294) என்னும் பாடல் பகுதியும் பெண்ணாசையைக் கடல் எனக்

குறிப்பிட்டிருப்பது காண்க. பரவை = கடல்.

மேலும் கூறுவான். இவளது அழகு முழுவதையும் நுகர எனது முக்கோடி ஆயுவும் போதுமோ இருபது கண் களும் போதுமோ” என்கிறான்.