பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/223

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் 0 221

తూ

ஏது என் = காரணம் என்ன? இங்கே,

'மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்

உற்றார்க்கு உடம்பும் மிகை” (345)

என்னும் குறட்பா ஒப்பு நோக்கற் பாற்று.

அரக்கர்கள் நல்லவர்கள் என்று இராவணன் கூறினான். சீதை மறுத்து அரக்கர்களை என் கணவன் இராமர் கொல்வார் என்றாள்.

அதற்கு இராவணன் கூறுவான். அரக்கரை மானிடர் அழிப்பர் எனில், யானைக் கூட்டத்தை முயல் வெல்லும் போலும் சிங்கக் கூட்டத்தை மான் கொல்லும் போலும்!

'மானவள் உரைத்த லோடும்

மானிடர் அரக்கர் தம்மை மீனென மிளிருங் கண்ணாய்

வேர் அற வெல்வர் என்னின் யானையின் இனத்தை எல்லாம்

இளமுயல் கொல்லும் பின்னும் கூன்.உகிர் மடங்கல் ஏற்றைக்

குருளைமான் வெல்லும் என்றான்” (57)

அரக்கர்கள் யானையும் சிங்கமும் போன்றவர்களாம், மானிடர் முயலும் மானும் போன்றவர்களாம். இவ்வாறு இராவணன் கேலியாகப் பேசிச் சீதையை மறுத்தான்.

உடனே சீதை, விராதன், கரன் முதலிய அரக்கர்கள் இராமனால் மாண்டதைக் கேள்விப்பட்டது ởn Lஇல்லையா? என இராவணனை மடக்கினாள்.

பூளை வீ

சீதை இவ்வாறு சரிக்குச் சரி வாதம் புரிந்ததும், சினம் மேலிட்ட இராவணன், நாளைக்கு உன் இராமன்