பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/227

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் 0 225

மனைவியரா யிருப்பதுண்டோ என்றார்களாம் அவர்கள். இந்த இழி சொல்லைக் கேட்டதும் கண்ணகி காதுகளைப் பொத்திக் கொண்டாளாம். இதைச் சிலப்பதிகாரத்தில்

92_ of 6 T -

'உடன் வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை

கடவதும் உண்டோ கற்றறிந்தீர் எனத் தீமொழி கேட்டுச் செவியகம் புதைத்துக் காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க” (i0:227-230)

கண்ணகி போலவே இங்கே சீதை காதுகளைப் பொத்திக் கொண்டாளாம்.

பின்னர் இராவணன் சீதையைத் தீண்டாமல் தவக் குடிலோடு தரையைப் பெயர்த்து எடுத்துத் தேரில் வைத்துக் கொண்டு வான்வழியே சென்றான்.

நீர் உரையீர்

சீதை மிகவும் உள்ளம் உளைந்து வழியில் கண்ட - பேசவோ கேட்கவோ முடியாத அஃறிணைப் பொருள்களை யெல்லாம் விளித்து, என் கணவரிடம் இதைச் சொல்லுக . என்று பிதற்றிக் கொண்டே சென்றாள்:

'மலையே மரனே மயிலே குயிலே

கலையே பிணையே களிறே பிடியே நிலையா உயிரேன் நிலைதேறினிர் போய் உலையா வலியர் உழைநீர் உரையீர்” (77) கலை = ஆண் மான்; பிணை = பெண் மான். களிறு = ஆண் யானை; பிடி = பெண் யானை, இரட்டையாக இருக்கும் இவற்றைப் பார்க்கும்போது, பிரிந்து செல்லும் சீதைக்கு எப்படி இருக்கும் உலையா வலியர் = அழியாத வலிமை உடைய இராமர். மரன் = மரம் - கடைப்போலி.