பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 ஆரணிய காண்ட ஆய்வு

இவற்றை யெல்லாம் அடியொற்றியே கம்பரும் பாடி யுள்ளார்.

வெளிப்பாட்டு மருத்துவம்

இவ்வாறு ஒருவர் கண்ட கண்ட பொருள்களினிடத் தெல்லாம் தம் துயரத்தைச் சொல்லி யாற்றுவது, சுவரிடம் சொல்லியாவது சோகத்தைத் தீர்த்துக் கொள்ளுதல்’ என்னும் பட்டறிவு மொழியை நினைவு செய்கிறது. மணிவாசகர் திருவாசகத்தில்,

"ஆரோடு கோகேன் ஆர்க்கெடுத்து உரைப்பேன்

ஆண்டநீ அருளிலை யானால்”

எனக் கூறியுள்ளார். தம் நோக்காட்டைப் பிறரிடம் சொல்லித் தீர்ப்பது உண்டு என்பது இதனால் தெளிவு.

இதற்கு உளவியலில் வெளிப்பாட்டு மருத்துவம் எனப் பெயர் கூறியுள்ளனர். துயரத்தை வெளிப்படுத்துவதே ஒரு மருத்துவமாம் - ஒரு வகை மருந்தாம். இதனை soft,560.566) “Expressive Theory’ argă Liff.

நால்வர்

மேலும், தயரதன் பிள்ளைகள் நால் வரையும் விளித்து, என்னை மீட்காமல் பழி கொள்வீரோ என்று புலம்புகிறாள் சீதை:

'வரதா இளையோய் மறுஏதும் இலாப்

பரதா இளையோய் பழியூ ணுதியோ” (79) வரதன் = இராமன்; அடுத்த இளையோன் = இலக்குவன். குற்றம் இல்லாதவனாம் பரதன்; அவனுக்கு அடுத்த இளையோன் சத்துருக்கனன். இந்த நால்வரையும் விளித்துளாள்.