பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 0 ஆரணிய காண்ட ஆய்வு

மின்னென விளங்கும் வீரத்துண்டத்

தன் மேரு என்னும்

பொன்னெடுங் குன்றம் வானின்

வருவதே போலும் மெய்யான்” (87)

துண்டம் 2 அலகு (மூக்கு). இந்த அலகு இராவண னோடு போர் புரியப் பெரிய படைக் கருவியாக இருந்தது. மற்றும், பெரிய இறக்கைகள், கால்கள், கால் நகங்கள் ஆகியவற்றையும் படைக் கருவிகள் போல் பயன்படுத்திக் கொண்டு சடாயு போரிட்டான்.

அறிவுரை

போரிடும் சடாயு இராவணனுக்கு அறிவுரை சொல்லிப் பார்த்தான். கெட்டவனே! உன் சுற்றத்தோடு அழிவைத் தேடிக் கொள்கிறாய். ஏன் இவ்வாறு செய்யத் தொடங்கி விட்டாய்? பத்தினியாகிய சீதையை விட்டுவிட்டு ஒடிப்போ. அங்ஙனம் செய்யின், நீ இறவாமல் உயிர் வாழலாம்.

'கெட்டாய் கிளையோடு நின் வாழ்வையெல்லாம்

சுட்டாய் இதுஎன்னை தொடங்கினை நீ

பட்டா யெனவேகொடு, பத்தினியை

விட்டு ஏகுதியால், விளிகின்றிலையால்' (94)

நிலை காணுதியோ

சடாயு மேலும் கூறுகிறான்: யானையைக் கொல்ல அதன் மேல் மண் உருண்டையை எய்கின்றாய்: நஞ்சு கொல்லும் என்பதை அறிந்தும் சோதித்துப் பார்க்கிறாய் போலும்!

'கொடுவெங்கரி கொல்லிய வந்து அதன்மேல்

விடும் உண்டை கடாவ விரும்பினையே அடும் என்பது உணர்ந்திலை? ஆயினும்வன் கடு உண்டு உயிரின்நிலை காணுதியோ? (97)